விமான நிலைய தாக்குதல்: பெல்ஜியம் பெண் மந்திரி ராஜினாமா

BEGIYAMபெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் சாவண்டம் சர்வதேச விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் 30 பேர் உயிரிழந்தனர். 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் கடந்த 22–ந்தேதி நடந்தது.இந்த தாக்குதலுக்கு பெல்ஜியம் போக்குவரத்து துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளே காரணம் என ஐரோப்பிய யூனியன் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை மந்திரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே, அத்துறையின் மந்திரி ஜாக்குலின் கலான்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை மன்னர் ஏற்றுக் கொண்டார். இத்தகவலை அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு பிரதமர் சார்லஸ் மைக்கேல் வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply