ஜனாதிபதி– வடக்கு முதல்வர் திங்கட்கிழமை சந்திப்பு இடம்பெறவுள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் வடக்கு மக்களின் காணிப் பிரச்சினை மற்றும் சிவில் நிர்வாகத்திற்கான தடைகள் என்பன குறித்து கலந்துரையாடப்படும். வடக்கில் சிவில் நிர்வாகம் இராணுவமயமாக்கப்பட்டுள்ளமையினால் ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதில் தமிழ் மக்கள் சவால்களை எதிர்கொள்வதாக, கடந்த வாரத்தில் இடம்பெற்ற வட மாகாண சபை அமர்விலும் அதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந் நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் திங்கட் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள் ளார்.
வடக்கு மக்களின் விடுவிக்கப்படாத காணிகள், விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களால் குடியேறமுடியாத நிலை உள்ளிட்ட சிவில் நிர்வாகத்திற்குள்ள தடைகள் போன்ற பிரச்சினைகளை மையப்படுத்தியே ஜனாதிபதி மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் திங்கட்கிழமை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியை சந்திக்கும் போது வடக்கில் நிலவும் சிவில் நிர்வாகத்திற்கான நெருக்கடிகள் மற் றும் அனைத்து பிரச்சினைகளையும் ஜனா திபதியின் கவனத்திற்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply