ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 9 பேர் பலி; 860 பேர் படுகாயம்
நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த ஜப்பானின் தென்மேற்கு தீவான கையூஷுவில் மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றன. ஜப்பானின் தென்மேற்கு தீவுப் பகுதியான கையூஷுவில் இரு தினங்களுக்கு முன் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 860-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
பெரும்பாலான அடுக்குமாடி வீடுகளில் நிலநடுக்கத்தால் விரிசல் ஏற்பட்டிருப்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந் துள்ளனர். அதிவேக புல்லட் ரயில்கள் தடம் புரண்டது மட்டுமின்றி, ரயில் நிலையங்களின் கூரைகளும் அடியோடு சாய்ந் துள்ளன. இதனால் ஜப்பானின் ஒரு சில பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட் டுள்ளது.
மேலும் அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த எட்டு மாத பெண் குழந்தையை ஆறு மணி நேரத்துக்கு பின் நேற்று மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். குடும்பத்தினர் இடிபாடுகளில் இருந்து எப்படியோ தப்பி பிழைத்த நிலையில் குழந்தை மட்டும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. எனினும் உடலில் எந்தவொரு காயமும் குழந்தைக்கு ஏற்படவில்லை. இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை அடையாளம் காண்பதற்காக மோப்ப நாய் உதவியுடன் மீட்பு குழுவினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply