இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது

india pacஇந்தியா-பாகிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடப்பதாக இருந்தது. பின்னர் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.இதேபோல் கடந்த ஜனவரி மாதம் இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் அளவில் நடைபெறுவதாக இருந்த அமைதி பேச்சுவார்த்தை பதன்கோட்டில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து ஆனது.

மேலும், கடந்த வாரம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பாசித் கூறுகையில், ‘‘இப்போதைக்கு இரு நாடுகள் இடையேயும் பேச்சுவார்த்தை கிடையாது. அமைதி பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுபற்றி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா நேற்று அளித்த வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதே எங்களது விருப்பம். அதை நிறுத்துவது தொடர்பாக எதையும் சிந்திக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை முடிந்ததும், வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சு நடைபெறும். பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி பாகிஸ்தான் வந்தபோது, இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தைதான் சிறந்த வாய்ப்பு. இருநாடுகளும் கலந்து பேசுவதுதான் விவேகமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply