ஐரோப்பாவுக்கு பாடம்: கிரீஸ் தீவில் இருந்து 12 சிரிய அகதிகளை இத்தாலிக்கு அழைத்து வந்த போப் பிரான்சிஸ்
சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அவர்கள் கிரீஸ் நாட்டின் தீவுகளில் கரையேறுகின்றனர்.ஆனால், சமீபத்தில் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் வகையில் துருக்கி-ஐரோப்பிய ஒன்றியம் இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி கிரீசில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், அகதிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிரீசின் லெஸ்பாஸ் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ், முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அகதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு பாடம் புகட்டும் வகையில் மனிதநேய செயலையும் செய்துள்ளார். அவர் லெஸ்பாசில் இருந்து புறப்படும்போது தனது சிறப்பு விமானத்தில் 12 சிரிய அகதிகளை அழைத்துக்கொண்டு இத்தாலிக்கு புறப்பட்டார்.
6 குழந்தைகள் உள்ளிட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபை ஆட்சிப்பீடம் ஆதரவு அளிக்கும் என்றும், அவர்களின் அகதிகள் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும்போது, இத்தாலியில் தங்குவதற்கு மனிதநேய விசாக்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply