மைத்­தி­ரி­ – மஹிந்த சந்திப்பு : ஒத்­து­ழைப்பு வழங்க மஹிந்த இணக்கம்

mahinda maithiஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளனர்.கடந்த வாரம் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ள­தாக ஆங்­கில ஊடகம் ஒன்று தெரி­வித்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பிர­த­மரின் சீன விஜ­யத்­திற்கு முன்னர் நடை­பெற்ற சந்­திப்­பினைத் தொடர்ந்து இந்த சந்­திப்பு நடத்­தப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­திக்கும் முன்னாள் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லான சந்­திப்பின் போது சில இணக்­கப்­பா­டுகள் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது அர­சியல் விவ­கா­ரங்­களில் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி இணக்கம் வெளி­யிட்­டுள்ளார். சீனா­வு­ட­னான உற­வுகள் கடந்த அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட சில அபி­வி­ருத்தித் திட்­டங்கள் போன்றன தொடர்பில் சில இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply