மனைவியைக் கொன்று, பிணத்தை துண்டுத்துண்டாக வெட்டி மறைத்த சமையல்காரர் கைது
தெற்கு டெல்லி பகுதியில் வசித்து வருபவர் குல்புதீன்(40), சமையல்காரராக வேலை செய்துவரும் இவரது மனைவி புல்லு பேகம்(36). இந்த தம்பதியருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். சமையல் வேலைநிமித்தமாக அடிக்கடி அசாம் மாநிலத்துக்கு சென்ற குல்புதீனுக்கு அங்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ ஆசைப்பட்டார்.
ஆனால், இதற்கு முதல் மனைவி புல்லு பேகம் தடைக்கல்லாக இருந்து வந்துள்ளார். எனவே, அவரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்த குல்புதீன், கடந்த வியாழக்கிழமை மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றார். பிணத்தை எப்படி மறைப்பது? என்று யோசித்த அவர், துண்டுத்துண்டுகளாக வெட்டி, வீட்டுக்குள் மறைத்து வைத்தார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் மனைவி காணாமல்போனதுபோல் நாடகம் ஆடிய அவரது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்ட போலீசார், ‘உரிய முறையில்’ விசாரித்தபோது, இந்த கொலையை குல்புதீன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புல்லு பேகத்தின் உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply