சாட் நாட்டின் அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண்ணை நியமித்து ஒபாமா உத்தரவு

SHAD WOMEN INDIAN1988-ம் ஆண்டு அமெரிக்காவில் அயலுறவு சேவை தொடர்பான கல்வியில் பட்டம்பெற்ற இவர், கேமரூன், கானா, ரோமானியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2003-2006 ஆண்டுகளுக்கு இடையில் ஜெர்மனி நாட்டின் பிரங்பர்ட் நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை முதன்மை அதிகாரியாகவும், 2006-2009 ஆண்டுகளுக்கு இடையில் வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள அமெரிக்க தலைமை தூதரகத்தின் துணை தலைவராகவும், 2009-2011 வரை அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விவகாரங்கள் பிரிவின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

2011-2014 ஆண்டுகளுக்கிடையில் ஏமன் அருகேயுள்ள டிஜிபோட்டி நாட்டுக்கான அமெரிக்க தலைமை தூதராக பணியாற்றியுள்ளார். தற்போது, அமெரிக்காவின் மனிதவள அமைச்சகத்தில் உயர்பதவி வகித்துவரும் கீதா பாசியை சாட் (Chad) நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமித்து அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply