பதவி விலகமாட்டேன்: பிரேசில் அதிபர் திட்டவட்டம்

brasilஅதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் தெரிவித்துள்ளார்.கடந்த 2010-ல் நடந்த அதிபர் தேர்தலில் ரூசெப் வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார். 2014-ல் நடந்த அதிபர் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபரானார். இந்நிலையில் பிரேசில் பொரு ளாதாரம் வலுவாக இருப்பதாக காட்டும் வகையில் நாட்டின் வரவு செலவு கணக்குகளில் மாறுதல் செய்திருப்பதாக ரூசெப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சி யாக எதிர்க்கட்சிகள் தரப்பில் அதிபரை பதவி நீக்கம் செய்வதற் கான தீர்மானம் நாடாளுமன்றத் தின் கீழவையில் நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டது.

மொத்தமுள்ள 513 உறுப்பினர் களில் 367 பேர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மேலவைக்கு தீர் மானம் அனுப்பப்பட உள்ளது. அங்கும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டால் அவர் இடைநீக்கம் செய்யப்படுவார்.

பல்வேறு சட்ட நடைமுறை களுக்குப் பிறகு ரூசெப் அதிபராக நீடிக்கலாமா, கூடாதா என்பது இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும்.

இந்த விவகாரம் தொடர்பாக ரூசெப் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: என்னை பதவியில் இருந்து நீக்க ஒருதரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன். அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply