இலங்கை-சீனா, கடன் பங்குபரிமாற்றம் : இந்தியா கவலை

indiaஸ்ரீலங்காவுக்கும் சீனாவிற்கும் இடையில் மேற்கொள்ள உத்ததேசிக்கப்பட்டிருக்கும் கடனுக்காக பங்குகளை பரிமாற்றம் செய்வது தொடர்பான யோசனை குறித்து தனது கவலையை ஸ்ரீலங்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளது. சீனாவுக்கு ஸ்ரீலங்கா செலுத்த வேண்டியுள்ள 8 பில்லியன் டொலரை பங்குகளாக மாற்றுவதே இந்த யோசனையாகும். சீனாவின் நிதியுதவியுடனான பாரிய உள்சபார் கட்டமைப்புத் திட்டங்கள் செயற்படாமல் உள்ளன.

இந்தநிலையில் அந்த திட்டங்களுடன் தொடர்புபட்ட கடன் தொகையை பங்குகளாக பரிமாறிக் கொள்வதற்கான யோசனையை கொழும்பு முன்வைத்திருக்கின்றது.

இந்தியாவின் அழைப்பின்பேரில் டெல்லிக்கு சிலசமயம் மே – ஜுன் மாதம் அளவில் அபிவிருத்தி மூலோபாயங்களுக்கான அமைச்சர் மலிக் சமரவிக்கிரம விஜயம் மேற்கொள்ளும்போது இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படுமென இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply