இலங்­கையில் தனி ஈழத்தை அமைப்பேன் : ஜெய­ல­லிதா

jeyaஇலங்­கையில் தனி ஈழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை எமது கட்சி தொடர்ந்து மேற்­கொள்ளும் என்று அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் தலை­வரும் தமி­ழக முதல்­வ­ரு­மான ஜெய­ல­லிதா தெரி­வித்­துள்ளார். திருச்­சியில் நேற்று முன்தினம் நடை­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;
தனி ஈழம் எய்­திடும் வகையில் தொடர்ந்து நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். இலங்கை தமி­ழர்கள் மீது போர் குற்­றங்கள் மற்றும் இனப்படு­கொலை நிகழ்த்­தி­ய­வர்கள் மீது, சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறேன்.

இலங்கை தமி­ழர்கள் முழு சுதந்­திரம் மற்றும் சுய­ம­ரி­யா­தை­யுடன் வாழ்ந்­தி­டவும், தனி ஈழத்தை எய்­திடும் வகையிலும் தொடர்ந்து நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

தமிழ் நாட்டில் முகாம்கள் மற்றும் முகாம்­க­ளுக்கு வெளியே உள்ள இலங்கை தமி­ழர்கள் பல ஆண்­டு­க­ளாக இங்கே வாழ்ந்து வரு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வச­தி­க­ளையும், உத­வி­க­ளையும், அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழக அரசு அளித்து வரு­கி­றது.

அத்துடன் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply