மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக முஸ்லிம்கள் கூறினர் :பசில்

BASILமஹிந்த ராஜபக்ஷவுக்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்ட முஸ்லிம்கள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தான் இம்முறை சிங்கள புத்தாண்டை எனது மனைவி, குழந்தைகளுடன் அல்ல கழித்தது. மாறாக, பொத்துவிலிலுள்ள சிறிய கிராமமொன்றில் முஸ்லிம்களுடனேயே கழித்தேன். இந்த நாட்டு முஸ்லிம்கள் தேர்தலின் போதும், தற்பொழுதும் எங்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர். அவர்கள் தான் என்னிடம் இந்தக் கருத்தைக் கூறினார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply