இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நாசம்
புதுடெல்லியில் மாண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள எப்.ஐ.சி.சி.ஐ. (இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு) கட்டிடத்தில் இன்று தீ விபத்து நேரிட்டது. அதிகாலை 1.45 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் சுமார் 35 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் மூன்று மணிநேர முயற்சிக்கு பின்னர் காலை 5 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் தீயில் சிக்கி காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு கட்டிடத்தில் அமைந்துள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் முற்றிலுமாக எரிந்து நாசம் அடைந்துள்ளது. சம்பவ இடத்துக்கு இன்று காலை நேரில்வந்து ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இந்த விபத்தால் நாசமடைந்த தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தில்கடந்த 1978-ம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகமானது, நாட்டுக்கு சொந்தமான பொக்கிஷம் என குறிப்பிட்ட அவர், இந்த தீ விபத்தால் ஏற்பட்ட இழப்பை வெறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மதிப்பீடு செய்ய இயலாது எனவும் தெரிவித்தார்.
இவ்விபத்துக்கான காரணம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply