கூட்டாட்சி முறைக்கு இலங்கை அதிபரின் கட்சி எதிர்ப்பு
இலங்கையில் தமிழர்களுக்கும் அரசியல் சுதந்திரம் அளிக்கும் வகையில் கூட்டாட்சி முறையை கொண்டு வர வேண்டும் என வடக்கு மாகாண கவுன்சிலில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த தீர்மானத்துக்கு அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து அக்கட்சியை சேர்ந்த மந்திரி மகிந்த சமரசிங்கே கூறுகையில், ‘கூட்டாட்சி தீர்மானத்தை எதிர்ப்பதில் இலங்கை சுதந்திர கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது. இந்த தீர்மானம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இது தீவிரவாதம் வலுவடையவே வழிவகுக்கும்’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை அரசியல் சாசனத்தில் கடந்த 1987-ம் ஆண்டு இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தத்துக்கு அப்பால் அரசு செல்லாது. 13ஏ பிரிவின் கீழ் என்ன அதிகாரம் இன்னும் உள்ளது என்பதை மட்டும் நாங்கள் ஆய்வு செய்வோம். ஆனால் கூட்டாட்சி தீர்மானத்தை நாங்கள் ஒருபோதும் பரிசீலிக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply