முகா­முக்குள் அத்­து­மீறி பிர­வே­சிக்­க­வில்லை : ஆர். சம்­பந்தன்

sampanthanஎதிர்க்­கட்­சித்­த­லைவர் முன் அனு­மதி இன்றி இரா.சம்­பந்தன் இரா­ணுவ முகா­முக்குள் பிரவே­சித்­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் கருத்­தாடல்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் வகை­யி­லேயே சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு மறுப்பு தெரி­வித்­துள்ளார்.இது தொடர்­பாக அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இரா­ணு­வத்தின் 57ஆவது படைப் பிரி­வினர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள வடக்கு தமி­ழர்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் குறித்து பார்­வை­யி­டு­வ­தற்கும் ஆராய்­வ­தற்­குமே நாங்கள் அங்கு சென்­றி­ருந்தோம். நாம் அங்கு சென்­ற­போது இரா­ணுவ முகாமின் பிர­தான நுழை­வாயில் திறந்து விடப்­பட்­டதன் கார­ண­மா­கவே முகா­முக்குள் உள்­நு­ழைந்தோம்.

மாறாக தற்­போது முன்­வைக்­கப்­ப­டு­கின்ற குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டை­யிலோ இல்­லா­விட்டால் கருத்­தா­டல்­களின் பிர­கா­ரமோ நாம் இரா­ணுவ முகா­முக்குள் அத்­து­மீறி பிர­வே­சிக்­க­வில்லை.

இரா­ணுவ முகா­முக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் என்னைக் கைது செய்யக் கோரும் நபர்களின் கூற்றுக்களை நிராகரிப்பதுடன் எனது கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply