அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் தவறான நபர்: டிரம்ப் கடும் விமர்சனம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஆதரவு திரட்டி வருகிறார் டொனால்ட் டிரம்ப். ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக முன்னிலை வகிக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையில் தான் அமெரிக்க அதிபருக்கான போட்டி வரும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.இந்நிலையில் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டொனால்ட் டிரம்ப் “அமெரிக்காவில் பெண் ஒருவர் அதிபராக வரவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஹிலாரி கிளிண்டன் அந்த பதவிக்கு தவறான நபர். ஹிலாரி தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் ஒரு பயங்கரமான ஜனாதிபதியாக இருப்பார். அவர் ஒரு பெண் என்பதைத் தவிர வேறு துருப்புச் சீட்டு ஒன்றும் இல்லை. அதுவும் பலகீனமான ஒன்று.
என் அமைச்சரவையிலும் பெண்கள் இடம்பெறுவார்கள். முக்கியமாக திறன் மிக்கவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply