சமஷ்டி தீர்வு ஸ்ரீலங்காவை பிளவு படுத்தாது : விக்னேஸ்வரன்
ஸ்ரீலங்காவை ஒன்றிணைக்கும் நோக்கிலேயே தாம் சமஸ்டியை கோரிநிற்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடமாகாண சபையின் சமஷ்டி தீர்வை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளாது என நேற்றைய தினம் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிப்பதாகவே தமது தீர்மானம் அமைந்துள்ளதாகவும், அது குறித்து அரசியல் கட்சிகளிற்கு கருத்து தெரிவிக்க உரிமையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமஸ்டி என்றால் பிரிவினை என்ற பிழையான காரணங்களுக்காகவே கடந்த 60 வருடங்களிற்கு மேலாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஸ்டி முறையே ஸ்ரீலங்காவிற்கு உகந்தது என்று தெரிவித்திருக்கின்றார். அதே போன்ற பல்வேறு சிங்கள தலைவர்களும் தெரிவித்திருக்கின்றார்கள்
எனவே சமஸ்டி அடிப்படையிலான தீர்வுத்திட்டம் நாட்டை ஒருமித்து வைத்திருப்பதற்காக திட்டமே தவிர அது பிரிவினைவாதம் அல்ல என வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply