இலங்கை கடற்படையால் தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு

meenavarkalதமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக 45 நாட்கள் தடைகாலத்தை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாட்டுப்படகுகள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல டோக்கன் பெறும் முறை இல்லாதால் எவ்வளவு படகுகள் மீன்பிடிக்கச் செல்கின்றன என்பது தெரியாத நிலை உள்ளது. நேற்று ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஏராளமானோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த படகுகள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அந்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் குட்டிக் கப்பல்களில் ரோந்து வந்தனர். இவர்கள் நாட்டுப்படகுகளை அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்து விரட்டினர்.

 

இதையடுத்து மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்த சேவியர், சேசு இருதயம், பாம்பன் சின்னபாலம் பொன்னாண்டி ஆகியோருக்கு சொந்தமான 3 நாட்டுப்படகுகளையும் அவற்றில் இருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

 

கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply