தற்கொலை அங்கி தொடர்பாகவே ராம், நகுலன் உள்ளிட்ட தளபதிகள் கைது
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே ராம், நகுலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரே கைதுசெய்வதாக குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாகவே இவர்கள் கைதுசெய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரடமே கேட்டறிந்துகொள்ள முடிம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் அறிக்கையின் பிரகாரமே எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எனினும் சாவகச்சேரி – மறவன்புலோ பகுதியில் கடந்த மாச் மாதம் 29 ஆம் திகதி வீடு ஒன்றில் இருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் எட்வேட் ஜுலியஸ் எனப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணியதாக தெரிவித்து ஒரு பெண் உள்ளிட்ட பல கைதுசெய்யப்பட்டனர்.
இருப்பினும் இருவர் வான்களில் கடத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவராக இருந்த ராம் எனப்படும் எதிர்மன் சிங்கன், சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி எனப்படும் நகுலன் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பா ளராக இருந்த புலனாய்வு தளபதியான கலையன் எனப்படும் அறிவழகன் ஆகியோர் இறுதியாக கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply