உறவுகளை சரிசெய்யவே விரும்புகிறோம், ஆனால் இந்தியா தீவிரவாதத்தை பற்றி மட்டுமே பேசுகிறது: பாக். தூதர் வருத்தம்

ndian pksஇந்தியாவுடனான உறவை சரிசெய்யவே பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா தீவிரவாதத்தை பற்றி மட்டுமே பேச முன் வருவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் செயலாளர் அஜிஸ் அகமது சவுத்ரி ஆகியோர் ஏப்ரல் 26-ம் தேதி சந்தித்துள்ள நிலையில், இது குறித்து ஐ.நா.,விற்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி மலீலோதி கூறியதாவது:

பாகிஸ்தான் அரசு தொடர்ந்து இந்தியாவை வலியுறுத்தி வருகிறது. பெரிய அளவிலான அமைதி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இந்தியா இன்னும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக தீவிரவாதம் குறித்து மட்டும் பேச விரும்புகிறது.

 

பொருளாதார வளர்ச்சி, தீவிரவாதத்தை தோற்கடித்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதத்தை முறியடித்தல் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் பாகிஸ்தான் முக்கியத்துவம் அளிக்கிறது.

 

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply