ரணில் எனக்கு எதிராக ஏன் வழக்குத் தாக்கல் செய்யப் போகிறார்?

mahindaபிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில விடயங்களை முன்னிலைப்படுத்தி என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றார் எதற்காக இதனை செய்கின்றார் என தெரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டில் காணப்பட்ட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமைக்காகவா என்மீது வழக்கு தொடர போகின்றார்களா என்று தெரியவில்லை என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்திற்கு உயிர் தருவோம் மக்கள் விரோத ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அரசுக்கு எதிராக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரினால் இன்று கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருர் மஹிந்த ராஜபக்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறான அழுத்தங்கள் என் மீது பிரயோகிக்கப்பட்டாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் தொடர்ந்து இருப்பேன்.

பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் சுதந்திரக் கட்சியானது முதல் முறையாக பிளவுப்பட்டது. அந்தவகையில் மீண்டும் இரண்டாவது முறையாக கட்சியானது யானையின் மடியில் அகப்பட்டு பிளவுப்படும் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டு வருகின்றது இதற்கு ஒரு போதும் மக்கள் இடமளிக்க கூடாது. எனவும் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் கூட்டத்திற்கு நான் வருகை தருவது தொடர்பில் கடந்த நாட்களில் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்ததோடு பல்வேறு தரப்பினர் எனக்கு தொலை பேசி அழைப்பினையும் ஏற்படுத்தி எனது தீர்மானம் தொடர்பில் கேட்டறிந்ததோடு என்னை இந்த கூட்டத்திற்கு கட்டாயமாக செல்லுமாறும் வலியுறுத்தினர்.

அந்தவகையில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற ரீதியிலேயே இந்த கூட்டத்திற்கு வருகை தந்துள்ளேன். எங்கள் கூட்டமொன்று காலியில் இடம் பெற்றுவருகின்றது. அங்கு சென்றவர்கள் அனைவரும் எனக்கு தொலை பேசியின் ஊடகாக நாங்கள் அங்கு சென்று இங்கு கட்டாயமாக வருகை தருகின்றோம் என தெரிவித்தனர்.

அன்று பண்டாரநாயக்க காலத்தில் இரண்டு பிரதான கட்சிகளிடையே காணப்பட்ட வேறுப்பட்ட நிலைபாடுகளில் ஒரு அங்கமாக கட்சியானது பிளவுப்பட்டது அந்தவகையில் இன்று யானையின் மடியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அகப்பட்டு மீண்டும் பிளவுப்படும் நிலையொன்று தோற்றுவிக்கப்படுகின்றது இதற்கு ஒரு போதும் மக்கள் இடமளிக்க கூடாது.

தேசிய அரசங்கம் என கூறுகின்றார்கள் உண்மையில் இது தேசிய அரசாங்கமா? ஒரு போதும் இல்லை தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மக்களின் வரத்திற்கு எதிராகவும் ஒன்றிணைந்துள்ள இரண்டு கட்சிகளின் அர்த்தமற்ற செயற்பாடுகளே இது என குறிப்பிட வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply