பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க தடை: மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு ஒப்புதல்

weit houseபாகிஸ்தானுக்கு அமெரிக்கா 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2 ஆயிரத்து 970 கோடி) நிதி அளிக்க இருந்தது. ஆனால் இந்த நிதியை வழங்கக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தானில் இயங்கி வருகிற ஹக்கானி வலைச்சமூக தீவிரவாதிகளை, அந்த நாட்டு அரசு ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி ஒடுக்கவில்லை என்று அமெரிக்கா கருதுகிறது. அதன்காரணமாகவே அந்த நாட்டுக்கு இந்த நிதியை வழங்கக்கூடாது என ஆட்சேபம் எழுந்துள்ளது. 

 

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த நிதியை வழங்க தடை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு (ராணுவ சேவை குழு) ஒப்புதல் வழங்கி உள்ளது.

 

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எட்டு ‘எப்-16’ ரக போர் விமானங்கள் வழங்கும் பிரச்சினையில், அமெரிக்க எம்.பி.க்கள் ஆட்சேபத்தால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இப்போது தங்களுக்கு கிடைக்க வேண்டிய 450 மில்லியன் டாலரை வழங்கவும் அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்திருப்பது பாகிஸ்தானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply