ருவாண்டா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ருவாண்டா பேரிடர் மேலாண்மை மற்றும் அகதிகள் துறையின் பேரிடர் மீட்பு இயக்குநர் பிலிப்பி ஹபின்ஷூடி கூறுகையில், இது வரை நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவால் தலைநகர் கிகாலியின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply