எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையைக் கொன்றவர் சிக்கினார்

policeகொழம்பு மாநகர சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகவேவை, 1986ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த டப்ளியு. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர், 22 வருடங்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 22 வருடங்களுக்கு பின்னர், புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட அவர், நீதவானின் உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply