இன்று வெளியாகும் பனாமா ஆவணங்கள்! ஆபத்தை எதிர்நோக்கும் செல்வந்தர்கள் யார்?

panamaஉலகளாவிய ரீதியில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா ஆவண கசிவு தொடர்பான தகவல்கள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவணத்திலுள்ள மோசடியாளர்கள் தொடர்பான விபரங்களை இணையத்தளம் ஊடாக வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேக இணைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பனாமா இரசிய ஆவணங்களுக்கமைய ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட 3 லட்சத்து 68 ஆயிரம் பேரின் பெயர்கள் இதில் வெளியிடப்படவுள்ளது.

இன்று வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆவண கசிவின் மூலம் இலங்கையை சேர்ந்த 46 பேரின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

உலக பணக்காரர்கள், தமது சொத்துகளை மறைத்தமை மற்றும் வரி ஏய்ப்பு செய்தமை தொடர்பாக பனாமா சட்ட நிறுவனம், பனாமா ஆவணங்கள் என்ற பெயரில் இரகசிய ஆவணங்களை வெளிப்படுத்தியது.

 

இதன்மூலம் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட அதிர்வலைகளை அடுத்து, ஐஸ்லாந்து பிரதமர் தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

 

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன், சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், சவுதி மன்னர், ரஷ்ய ஜனாதிபதி போன்ற அரசியல் தலைவர்களுடன், பொலிவுட் நடிகர்கள், நடிகைகள் உட்பட 500 மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் சிறந்த கால் பந்து வீரர் லயனல் மெஸி ஆகியோர் இந்த பனாமா இரகசிய ஆவணங்களில் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply