யாழில் நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டு
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முதலாவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.மாநாட்டின் ஆரம்பத்தில், தமிழராட்சிமாநாட்டு நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதை அடுத்து, யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மத தலைவர்களின் ஆசியுரையுடன் மாநாடு ஆரம்பமாகியது.
இந்த மாநாட்டில், கட்சியின் தீர்மானங்கள் வெளியிடப்பட்டதுடன், கட்சியின் உறுப்பினரினால் சபையில், தீர்மானம் பிரகடனம் செய்யப்பட்டு, பொது மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த மாநட்டில், வடமாகாண சபையின் எதிர்க்கட்சிதலைவர் சின்னத்துரை தவராசா, மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் உட்பட மத குருமார்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
ஆதன்போது, மத குருமார்களினால், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply