முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது தனிப்பட்ட கொள்கைக்கு அமைவான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் : நிமல் சிறிபால
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் போலியானதும் மெய்யானதுமான பல பிரசாரங்கள் எழுந்துள்ளன. சுதந்திர கட்சியில் பிளவுகள் மற்றும் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தது உண்மை. அதனால் நாம் முற்றுமுழுதாக வேறுபட்டு சென்றுவிடவில்லை.மேதினத்தின் போது மக்களும் எமக்கான முழு ஆதரவை வழங்கும் வகையில் பெருந்திரளாக கூடியிருந்தனர். கட்சியில் பிளவை ஏற்டுத்த நினைத்தவர்களும் தற்போது கட்சியை ஒன்றுபடுத்த முற்படுகின்றனர் அதுவே எமது மேதின வெற்றியாகவும் அமைந்துள்ளது.
ஆனால் தற்போதும் வேறுபட்ட கருத்துக்கள் எண்ணங்கள் உள்ளன. அவற்றினால் கட்சி பிளவுபட்டுச் சென்றுவிடும் என்று இனி எவரும் எதிர்பார்க்க வேண்டாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது தனிப்பட்ட கொள்கைக்கு அமைவான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
அதனால் அவரை வேறுபடுத்தி நாம் செயற்படபோவதில்லை. அவருடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமே களைய வேண்டும்.அவரை வேறு தரப்பாக பார்க்கும் பட்சத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply