மீனவர்களின் பிரச்சினை குறித்து ஆராய யாழ். வந்தது இந்தியக் குழு!

meenavarkalஇலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை கண்டறியும் வகையிலும், அவர்களின் பிரச்சினைகளுக்கு இருநாட்டு அரச தலைவர்களும் சுமூகமான முறையில் தீர்வு காணும் வகையிலும் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார மற்றும் மீன்பிடி துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது.

நேற்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக அலுவகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இவர்கள், யாழ் இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பின்னர் இந்திய துணைத் தூதரகத்தில் வடமாகாண மீனவர்கள் சங்கப் பிரதிகளுடனான சந்திப்பிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் தற்போதை பிரச்சினைகள், இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை ஆழ்கடலில் மீன்பிடிப்பதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதார பின்னடைவுகள் போன்ற விடயங்கள் உள்ளடங்கிய 07 அம்ச கோரிக்கையினை ஒன்றை அவ் அதிகாரிகளிடம் கையளித்ததாக யாழ் மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மூல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இலங்கை மீனவர்களால் கையளிக்கப்பட்ட 7 அம்ச கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களாவன,

01. கடல் வளங்களையும் கோடிக்காணக்கான குஞ்சு மீன்களையும் அழிக்கும் இழுவைத் தொழிலை் முறையினை முற்றாக நிறுத்த வேண்டும்.

02. அனுமதி தாண்டிவரும் மீனவ படகுகளை கைப்பற்றி தண்டனை வழங்க வேண்டும்.

03. தணுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையும், தலைமன்னரில் இருந்து பருத்தித்துறை வரையும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான எல்லை கோட்டினை அடையாளப்படுத்தல் வேண்டும்.

04. ஒவ்வொரு கிலோமீற்றர் இடைவெளிகளுக்கும் படகுகளை இணங்காட்ட கூடிய வகையில் ஒலியொழுப்பி மற்றும் மிதவைகளை போடுதல் வேண்டும்.

05. பாரம்பரிய முறையில் படகுகள் கடல் ஒட்டத்திற்கு மாற்றும் போது எல்லை தாண்டுவது உறுதிபடுத்தும் பட்சத்தில் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

06. கடல் வளங்களை அழித்து, கடல் வளங்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான அனைத்து தொழில் முறைகளையும் நிறுத்தல் வேண்டும்.

07. இந்த செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையில் இலங்கை இந்திய கண்காணிப்பு படை கூட்டு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

என்ற கோரிக்கைகள் உள்ளடங்குவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply