நான் முதல்வராகும் வாய்ப்பை கெடுத்தவர் ஜெயலலிதா: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவ.வி. மெய்யநாதனுக்கு வாக்கு சேகரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் ஆதரவு திரட்டினார்.அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தை 5 தடவைகூட சுற்றிவந்து மக்களை சந்தித்தது இல்லை. அவரது ஆட்சியில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு கமிஷன் வாங்கியதைத் தவிர வேறெந்த பணியும் நடைபெறவில்லை. அமைச்சர்கள் எல்லாம் கமிசன் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்களாக மாறிவிட்டார்கள்.
நாட்டில் தீண்டாமையை எப்போதோ டாக்டர் அம்பேத்கர் ஒழித்துவிட்டாலும், தமிழ்நாட்டில் அதிமுக பொதுக்கூட்டங்களில் தீண்டாமையை கடைபிடிப்பதுபோல வேட்பாளர்களிடம் நடந்துகொள்கிறார் ஜெயலலிதா. நம்ம அமைச்சர்கள் எல்லாம் கார் டயர்களையும், விமானத்தையும் பார்த்து கும்பிடும் அவல நிலையில் உள்ளது.
எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக-வில் ஜெயலலிதாவை நானும், வீரப்பனும், முத்துச்சாமியும் இன்னும் பலரும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே சேர்த்தோம். ஆனால் பின்னர் என்னையே அந்தக் கட்சியில் இருந்து புறந்தள்ளியவர் ஜெயலலிதா. இல்லையென்றால், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சிறை செல்லும் போதெல்லாம் நான் முதல்வராகி இருப்பேன். ஒ.பன்னீர் செல்வம் ஆகி இருக்க முடியாது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கியை சேர்ந்தவர் முதலமைச்சரானார் என்ற பெயராவது எனக்கு இருந்திருக்கும். இதைக் கெடுத்தவர் ஜெயலலிதாதான்.
குடும்பமே இல்லாதவருக்கு எதுங்குங்க இவ்வளவு சொத்து. சசிகலாவுக்கு சொத்து வாங்கவே நேரம் பத்தல. ரெண்டு மாசத்துக்கு முன்னால கூட ஆயிரம் கோடிக்கு தியேட்டர் வாங்கி இருக்காங்க. அதெல்லாம் யாருக்காக எதுக்கு வாங்கி குவிக்கிறாங்க. அவங்க தங்க 2 ரூம் இருந்தா போதாதா? கொடநாட்ல இருந்து தான் எல்லாம் நடக்குது. அவங்க தான் எதுமே இல்லாதவங்கலாம்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் மட்டுமின்றி மக்களவைத் தேர்தலிலும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். அந்த தேர்தல் முடிவில் ராகுல் பிரதமராவார். திமுக-வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற வைகோவின் நோக்கம் நிறைவேறாது. பாவம் விஜயகாந்த் வைகோ பேச்சைக் கேட்டு இப்படி போயிட்டார். நாங்க கலைஞரை முதலமைச்சர் ஆக்குவோம் என்கிறோம். ஆனா அங்கே விஜயகாந்த் முதல்வரா? பிரேமலதா முதல்வரான்னே இன்னும் முடிவு செய்ய முடியாம தவிக்கிறாங்க.
கூட்டணியை அமைச்ச வைகோ இன்னைக்கு தேர்தல் தோல்வி பயத்தில் தேவர் சிலைக்கு மாலை போட போகும் போது தடுத்ததாக சொல்லி தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டு கூட்டணயினரை நடுத்தெருவில் விட்டு விட்டார். இவ்வாறு பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply