அதிபர் தேர்தல் பிரமைரி: மேற்கு வர்ஜீனியாவில் ஹிலாரி தோல்வி
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கான மேற்கு வர்ஜீனியா மாகாண பிரைமரி தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் பெர்னி சேண்டர்ஸ் , தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார்.ஆனாலும், இந்த வெர்மாண்ட் மாநில செனட் உறுப்பினர் ஹிலாரி கிளிண்டனை விட ஒட்டு மொத்த பிரதிநிதிகள் எண்ணிக்கையில் இன்னும் பின் தங்கியே இருக்கிறார். இருந்தாலும், இந்த வெற்றி சேண்டர்ஸுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது.
குடியரசுக் கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் மேற்கு வர்ஜீனியா மற்றும் நெப்ராஸ்கா மாகாணங்களில் நடந்த பிரைமரி தேர்தல்களில் வென்றார்.
அவரை எதிர்த்து களத்தில் இருந்த கடைசி சில வேட்பாளர்களும் கடந்த வாரமே போட்டியில் இருந்து விலகிவிட்டனர்; ஆனால் அவர்களின் பெயர்கள் இன்னும் வாக்குச்சீட்டில் இருக்கின்றன.
ஆனால் நியுயார்க் வர்த்தகரான டொனால்ட் ட்ரம்ப்புக்கு குடியரசுக் கட்சி அமைப்பின் ஆதரவைப் பெறுவதில் இன்னும் பெரும் பிரச்சனைகள் இருக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply