யாழில் வாள்வெட்டு சம்பவங்கள்: “ரொக் டீம்” குழுவினரைக் கைது செய்ய இரவுநேர ரோந்து நடவடிக்கைகள்

policeயாழ். குடாநாட்டில் பதிவாகிய வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கைதான “ரொக் rockடீம்” என்ற குழுவுடன் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை யாழ். தலைமையக விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் நால்வர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்கள் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், மூன்று வாள்கள், கைக் கோடாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தன.

கைக்குண்டுகளை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்வதற்கும், ஏனைய பொருட்கள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கும் யாழ். தலைமையக குற்றத்தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் பதிவான பல்வேறு குற்றச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது 5 சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான இரவுநேர ரோந்து நடவடிக்கைகள் மற்றும் திடீர் சோதனை நடவடிக்கைகள் யாழ். குடா நாட்டில் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply