முதல்வர் கருணாநிதிக்கு புலிகள் கொலை மிரட்டல்

முதல்வர் கருணாநிதிக்கு புலிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த இந்தக் கொலை மிரட்டல் கடிதத்தில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பும் தொலைபேசியில் இவ்வாறான ஒரு கொலை மிரட்டல் கலைஞருக்கு விடப்பட்டது. தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈழத் தமிழர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் என்று கூறினார்.

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி மர்ம நபரைப் பிடிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் மத்திய குற்றப் பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கரூரில் உள்ள பொது தொலை பேசியில் இருந்து மர்ம நபர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கரூருக்கு சென்று மர்ம நபர் பேசியதாக கூறப்படும் தனியார் நிறுவன பொது தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply