எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சம்பந்தன் எந்த முகாமுக்கும் செல்வதற்கு உரிமை உள்ளது

13may1எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நாட்டில் முக்கியமான பொறுப்பில் உள்ள ஒருவர்.எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவருக்கான மதிப்பையும் அந்தஸ்தையும் அவருக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இருக்கையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவர் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.வடக்கில் இராணுவ முகாம்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் அவர் சென்று பார்வையிட முடியும்.அதை தவறாக சித்தரித்து அரசியல் ரீதியில் பூதாகரமாக்க வேண்டாம். வடக்கில் மட்டுமல்ல நாட்டில் எந்த பகுதியில் உள்ள இராணுவ முகாம்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் செல்லவேண்டும் என்றால் அல்லது வேறு அமைச்சர்கள் யாரேனும் செல்லவேண்டும் என்றால் முன்கூட்டியே பாதுகாப்பு அனுமதியை பெற்றால் அது ஆரோக்கியமான விடயமாக அமையும்.

அதேபோல் அவ்வாறு முன்கூட்டியே அறிவுறுத்தல் விடுத்தால் நாமும் பாதுகாப்பு சார் நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்களுக்கான தகவல்களை பெற்றுத்தரக்கூடிய ஆயத்தங்களையும் செய்துகொடுக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நாம் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் எடுத்துரைத்தோம்.

அவரும் எமது காரணங்களை ஏற்றுக்கொண்டார். எவ்வாறு இருப்பினும் இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.வடக்கிலும் தெற்கிலும் தமது அரசியல் சுயலாபங்களை கருத்தில் கொண்டு மக்களை தூண்டிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவற்றை மக்கள் கருத்தில்கொள்ள கூடாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply