அதிகாரசபைக்கு எதிராக வெளிநாடுகளும் புகார்
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைக்கு எதிராக வெளிநாடுகளும் புகார் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் குறித்த அதிகாரசபையில் நிர்வாக திறன் குறைந்தவர்கள் இருப்பதாகவும், இதனாலேயே இவ்வாறான பிரச்சினைகள் எழுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தன்னை சந்திப்பதற்காக வருகை தந்த அவுஸ்திரேலிய தூதுவரும் குறித்த மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகார சபையின் பதிவு சம்பந்தமாகவே தூதுவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும், இது சம்பந்தமாக அதிகார சபையின் தலைவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply