கொமாண்டோ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்ஷ வெளியேற்றம்

mahindaஉகண்டா நாட்டின் ஜனாதிபதியாக யுவேரி முஸவேனியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அநேக மேலைத்தேய நாட்டு ராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி வரை விழாவில் கலந்து கொண்டு உகண்டா ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. உகண்டாவின் ஜனாதிபதியாக 5 ஆவது தடவையாகவும் யுவேரி முஸவேனி பதவியேற்கும் நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

இந்த பதவியேற்பு விழாவில் உரையாற்றிய உகண்டா ஜனாதிபதி சர்வதேச இராணுவ யுத்த நீதிமன்றத்தை விமர்சித்துள்ளார். இதனையடுத்தே மேலைத்தேய நாட்டு அதிகாரிகள் விழாவில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இது தவிர இந்த விழாவில், சர்வதேச இராணுவ யுத்த நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சூடான் ஜனாதிபதியும் கலந்து கொண்டுள்ளதோடு இதற்கும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.

 

இதேவேளை, ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

 

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அறிய வருகிறது. அவர் பாதுகாப்பாக வேறு இடத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடுதிரும்பினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply