இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, வர்த்தக கலாச்சார உறவுகள் மேம்படுத்தப்படும் : இந்தியா
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று இந்தியாவிற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துள்ளார்.இந்திய அரசின் அனுசரணையுடன் மேற்கத்தைய மருந்து உற்பத்தி வலையத்தினை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பிலும், இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, வர்த்தக கலாச்சார உறவுகளை மேலும் மேம்படுத்துவது பற்றியும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்குத் தேவையான மருந்து வகைகளில் 80 வீதமானவை இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்ற அதேசமயம் இந்த மருந்து உற்பத்தி வலையத்தினை ஸ்தாபிப்பதன் மூலம் இந்த மருந்துகளை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பும் நமது நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
15 மாதங்கள் எனும் குறுகிய காலப்பகுதியில் ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் ஆகியோருக்கிடையில் இடம்பெறும் 6வது உத்தியோகபூர்வ சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply