புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 16-ந்தேதி ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 2.6 கோடி வாக்காளர்கள் ஓட்டுபோட இருக்கிறார்கள். இங்கு 109 பெண்கள் உள்பட 1,203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரள மாநிலத்திலும் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் 16-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு 9.43 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
மேற்குவங்காளத்தில் 6 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 5-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாக ஏப்ரல் 11-ந்தேதியுடன் தேர்தல் முடிந்துவிட்டது.
மார்ச் 8-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் 19-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply