பிரபாகரன் வெளியேறச் சென்னதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வெளியேறினார்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு ரப்பர் சீல் மட்டுமே. பிரபாகரன் உட்காரச் சொன்னால் அதன் உறுப்பினர்கள் உட்காருவார்கள். எழுந்திருக்கச் சொன்னால் எழுந்து நிற்பர்கள். மறுத்தால் அவர்களின் உடலில் உயிர் இருக்காது என நிர்மாண, பொறியியல்துறை அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன கூறினார்.

வன்னி யுத்தத்துக்கு எதிப்புத் தெரிவிக்கும் முகமாகவும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதற்கு வரவு செலவுத்திட்டத்தில் பெரும் தொகைப் பணம் ஒதுக்கப்படுவதை ஆட்சேபித்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இன்று சபை அமர்வைப் பகிஷ்கரித்தமை குறித்து கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அமைச்சர் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறாது இன்றைய வரவு செலவுத் திட்ட உரைய செவிமடுத்துக் கேட்டிருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலையை அவர்கள் உணந்து கொள்வர்.

ஒரு நிதியமைச்சர் அல்லது ஒரு ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் மொழியிலேயே விளக்கி வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தது பிரபாகரினிடமிருந்து தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கேயாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply