சண்டையிட பயந்து ஓடிய 45 பேரை உயிருடன் புதைத்து கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்

isisஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மொசூல், கிர்குக் நகரங்கள் கடும் சண்டைக்கு பின் மீண்டும் ராணுவம் வசம் வந்தது. அதற்கு அமெரிக்க கூட்டுப்படைகள் உதவி செய்தன. தற்போதும் தீவிரவாதிகள் வசம் உள்ள எஞ்சிய பகுதிகளையும் மீட்கும் அதிரடி நடவடிக்கையில் ஈராக் ராணுவம் தீவிரமாக உள்ளது. சமீபத்தில் அதாவது கடந்த 12-ந் தேதி நயன்வே மாகாணத்தில் அல்-பஷீர் மற்றும் குயாரா புறநகரில் தீவிரவாதிகளுக்கும், ஈராக் ராணுவத்துக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. அப்போது சண்டையிட மறுத்தும், பயந்தும் சில தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை கைது செய்த ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பினர் அடைத்து வைத்தனர். புறநகர் பகுதியில் மிகப் பெரிய அளவில் பள்ளம் தோண்டினர். சண்டையிட மறுத்து ஓட்டம் பிடித்தவர் களை பள்ளத்தில் தள்ளி உயிருடன் மண்னை போட்டு மூடி கொன்றனர்.

அவ்வாறு தனது அமைப்பை சேர்ந்த சுமார் 45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் கொன்று புதைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற கொடூர நடவடிக்கைகளில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. கடந்த பிப்ரவரி 27-ந் தேதி அன்பர் மாகாணத்தில் மொசூல் பகுதியில் அல்- ஹாதர் பகுதியிலும் 35 பேரை உயிருடன் புதைத்து கொன்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply