பண நாயகம் மிரட்டினாலும் ஜனநாயகம் வெல்வது உறுதி : கி.வீரமணி

தமிழகம் முழுவதும் பண நாயகம் மிரட்டினாலும், ஜனநாயகம வெல்வது உறுதி. கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமையும் என திராவிடர் k-veeramaniகழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.சென்னை காமராஜ் அவென்யூவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் இன்று கி.வீரமணி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்க அவர் பதிலளித்தார்.

செய்தியாளர்: தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

கி.வீரமணி: இன்று காலை 8.45 மணிக்கு – ராகுகாலம் என்று மற்றவர்கள் நினைக்கின்ற மூடநம்பிக்கை நேரத்தில் – சரியாக வாக்குகளைப் பதிவு செய்தோம். என்னுடைய துணைவியார், மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து வந்து வாக்குப் பதிவு செய்தோம்.

நிச்சயமாக, இந்தத் தொகுதி மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், பண நாயகம் எவ்வளவு மிரட்டினாலும், கலைஞர் தலைமையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து – ஜனநாயகம் வெல்வது உறுதி. இதையே இந்தத் தேர்தல் சொல்லும்.

செய்தியாளர்: இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தலை தள்ளி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்; அதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கி.வீரமணி: தேர்தல் ஆணையம் ஓரளவிற்கு இப்பொழுதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது- காலதாமதமாக விழித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியமானது. இவ்வாறு கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply