நான் முட்டாள் இல்லை- இங்கிலாந்து பிரதமருக்கு டொனால்ட் டிரம்ப் பதில்
அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். நான் அமெரிக்காவின் அதிபரானால் குறிப்பிட்ட காலத்திற்கு முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் டெவிட் கேமரூன் முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என்ற டொனால்ட் டிரம்ப் யோசனையை’ முட்டாள் தனமான பிரிவினையை துண்டக்கூடிய தவறான யோசனை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெவிட் கேமரூனின் குற்றசாட்டு பற்றி விளக்கம் அளித்துள்ள டொனால்ட் டிரம்ப் “ முதல் விஷயம் நான் முட்டாள் கிடையாது. அதற்கு நேர் எதிரானவன். தற்போதைய அதிபர் ஒபாமாவை போன்றவன் இல்லை. நான் ஒற்றுமையை உருவாக்குபவன்.
இங்கிலாந்து பிரதமருடன் நல்ல உறவு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவருடன் நல்ல உறவை உருக்க முடியும் நம்பிக்கையுடன் உள்ளேன். ஆனால் அவர் பிரச்சனையை தீர்க்க போவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply