புலம்பெயர்ந்த நிபுணர்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க
வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் பல்துறைசார் ஆய்வறிவாளர்கள் நாட்டுக்குத் திரும்பி வந்து அபிவிருத்திக்குக் கைகொடுக்க வேண்டும் என்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள அழைப்பு காலோசிதமானது. றப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூற்றாண்டு நிறைவு நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதே பிரதம மந்திரி இந்த அழைப்பைவிடுத்தார்.
பொறியியல், வைத்தியம், கட்டடக்கலை போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பலர் நாட்டிலிருந்து வெளியேறிச் சென்று வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குடியேறியுள்ளார்கள். இவர்களின் திறமை இப்போது அந்த நாடுகளுக்குப் பயன்படுகின்றது. இவர்கள் குடியேறியுள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் இவர்களின் பங்களிப்பினால் பலனடைகின்ற போதிலும் அந்த நாடுகளுக்கு இவர்களின் பங்களிப்பு அத்தியா வசியமானது எனக் கூறுவதற்கில்லை.
அந்த நாடுகளில் இவர்களைப் போன்ற பல நிபுணர்களைப் பெறமுடியும். பல நிபுணர்களை உருவாக்குவதற்கான பொருளாதார வளம் அந்த நாடுகளுக்கு உண்டு. ஆனால் இலங்கைக்கு இந்த அறிஞர்க ளின் சேவை அத்தியாவசியமானது. அபிவிருத்தியுகத்திலே இலங்கை அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் இல ங்கையின் ஆய்வறிவாளர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இங்கிருந்து வெளியேறுவதற்குச் சொல் லப்பட்ட காரணம் நாட்டில் அமைதியான சூழ்நிலை இல்லை என்பதாகும். அதில் உண்மை இல்லாமலில்லை. நாட் டின் சகல பகுதிகளிலும் பயங்கரவாதம் அமைதியைக் கெடுத்தகாலம் இருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திர மன்றி நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பயங்கரவாதத்தின் கொடிய கரம் வியா பித்திருந்தது. பல ஆய்வறிவாளர்கள் பய ங்கரவாதத்துக்குப் பலியாகியிருக்கின்றார் கள். இந்தப் பின்னணியில் துறைசார் நிபணர்கள் வேறு நாடுகளுக்கு வெளியேறிச் சென்றதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
புலிகளுக்கு எதிராக படையினர் ஆரம் பித்த இராணுவ நடவடிக்கை வெற்றிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. புலிகள் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை ஒவ்வொன்றாக இழந்து தோல்வியின் இறு திக் கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள். அவ ர்களின் தோல்வி முழுமையாகிவிட்டது. நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கும் இன்றைய நிலையில் வெளி நாடுகளில் வாழும் இலங்கையரான நிபு ணர்களும் ஆய்வறிவாளர்களும் நாட்டுக் குத் திரும்பிவந்து நாட்டின் முன்னேற்றத் துக்குக் கைகொடுக்க வேண்டும். இது அவர்களின் தார்மீகக் கடமை.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறியிருக்கும் புலமையாளர் களும் திறமையானவர்களும் இலங்கையி லேயே கற்றுத் தேறியவர்கள். பாலர் வகு ப்பு முதல் பல்கலைக் கழகம் வரை இல ங்கையின் இலவசக் கல்வித் திட்டத்தின் பலனை அனுபவித்தவர்கள். இவர்களைப் புலமையாளர்களாகவும் திறமையாளர்க ளாகவும் உருவாக்கியதில் இலங்கை மக் கள் அனைவருக்கும் பங்கு உண்டு. ஏனெ னில் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இவர்களின் கல்விக்காக மக்களின் வரிப் பணத்தையே அரசாங்கம் செலவிட்டது.
வளமான வாழ்க்கையை நாடிச் செல்வ தற்கு இவர்களுக்குள்ள உரிமையை யாரும் மறுதலிக்க முடியாது. ஆனால் தங்கள் கடமையையும் இவர்கள் செய்யவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு இந்த நிபுணர்களின் பங்களிப்புத் தேவைப்படுகின்றது. அந்தத் தேவையை நிறைவேற்றிய பின் இவர்கள் வளம் தேடிச் செல்வதை யாரும் குறை கூற முடியாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply