ஜேர்மன் சான்சலர் அலுவலகம் முன்பு பன்றி தலையை வீசிய மர்ம நபர்கள் யார்?
ஜேர்மன் நாட்டின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் அலுவலகம் முன்பு மர்ம நபர்கள் சிலர் இறந்தபோன பன்றியின் தலையை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு ஜேர்மனியில் உள்ள Stralsund என்ற நகரில் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் பாராளுமன்ற அலுவலகம் அமைந்துள்ளது.இந்த நகரில் இருந்து தான்26 வருடங்களுக்கு முன்னர் ஏஞ்சலா மெர்க்கல் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் பொலிசார்இந்த நகரில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது ,சான்சலரின் அலுவலகம் வழியாக சென்றபோது, அங்கு வெளியே மர்ம பொருள் ஒன்று இருந்துள்ளதை கண்டு ஆய்வு செய்துள்ளனர்.
இதில், அந்த பொருள் இறந்த பன்றி ஒன்றின் தலை என்றும், அதன்மேல் ஏஞ்சலா மெர்க்கலை அவமதிக்கும் விதத்தில் வாசகங்கள் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் ஜேர்மனிக்குள் வரும் அகதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டிக்கும் விதத்தில் இந்த செயல் நடத்தப்பட்டு இருக்கலாம் என பொலிசார் சந்தேகம்அடைந்துள்ளனர்.
இரவு நேரத்தில் சான்சலரின் அலுவலகம் முன்பு பன்றியின் தலையை வீசி சென்ற மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply