மாண்டது மனிதர் ஆனாலும் அழிந்தது ஓர் இனம் மே 18

மனிதனின் மகத்தான படைப்புகள் மானிட ஜென்மத்தின் முடிவுக்கான ஆரம்பம்.உழைப்பும் அறிவும் கொண்ட மனித நேய விருச்சகங்கள் வாழ்ந்து may 18மண்ணாகிப்போன இந்த பூமி அன்று பண்பாடு, பாரம்பரியம் என கூட்டாய் வாழ்ந்த ஒரு குடும்பம்.சொந்த மண்ணிலும் வாழ முடியாமல் அன்னியர் மண்ணிற்கும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான் உயிர் நீத்த எம் சொந்தங்கள். நகங்களை கூட வெட்டத் தயங்கிய கண்கள் ,சிலர் சிரங்கள் துண்டிக்கப்பட்டதை கண்டு விழிவடியாக வழிந்த நீர் கூட கொடுரமாக தான் இருந்தது யுத்த பூமியில் அன்று,

2009 மே 18ல் தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தின் ஆறாத வடுக்களாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஏக்கத்துடனும் கவலையுடனும் பதறிய நிலையில் தம்முயிர்களை துறந்த தமிழனின் வரலாற்றில் மறக்க முடியாத துயரநாள் இன்று.

அதனை நினைவு கூரும் முகமாக, உயிர் நீத்த உறவுகளுக்கு மௌனமாய் அஞ்சலி செலுத்துவேம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply