பாரிய வெள்ளம் ஏற்படும் ஆபத்து !
களனி ஆற்றின் நீர்மட்டம் பாரியளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாகலகம வீதியில், தற்பொழுது நீர் மட்டம் ரிக்டர் அளவில் 7 மீட்டர் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.இது பாரிய வெள்ள நிலைமை என கொழும்பு வலயப் பொறுப்பாளர் பொறியியலாளர் பீ,கே பத்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.களனி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொறியியலாளர் பீ,கே பத்மகீர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply