இடம்பெயர்ந்த மக்கள் சர்வதேச சட்டத்துக்கமைய நடத்தப்பட வேண்டும்: பான்கீ மூன்
இடம்பெயர்ந்த மக்களை சர்வதேச சட்டத்துக்கு அமைய நடத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன், இடம்பெயர்ந்தவர்களைப் பராமரிக்கும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து இலங்கை செயற்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
“இடம்பெயர்ந்த மக்களைப் பாதுகாப்பதற்கும், உளரீதியிலான தேவைகளை வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் ஐ.நா. சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும்” என பான்கீமூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையின் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மக்கள் ஆபத்தில் இருப்பதாகத் தொடர்ச்சியான தகவல்கள் வெளியாகிவருகின்றன. இது குறித்து செயலாளர் நாயகம் கவலையடைந்துள்ளார். விடுதலைப் புலிகள் சிறிய பகுதிகளில் பொதுமக்களை அடைத்துவைத்துள்ளனர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருக்கும் மக்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பான்கீ மூன், பாதுகாப்புப் பிரதேசங்களில் கனரக ஆயுதங்களை வைத்து இலங்கை அரசாங்கத் தரப்பினர் தாக்குதல்களை நடத்தக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு இருப்பதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply