தேர்தல் முடிவுகள் 10 மணி நிலவரம்: அதிமுக முன்னிலை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக கூட்டணி 118 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன.சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, உளுந்தூர்பேட்டையில் மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
8 மணிக்கு தொடங்கியது:
தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply