சிரியாவின் பல்மைரா நகரில் ரஷிய ராணுவ தளம் அமைப்பு

siriyaசிரியாவின் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கிறது. அத்துடன் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளது. இவர்கள் சில பகுதியை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனிநாடு அமைத்துள்ளனர். எனவே அங்கு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஐ.எஸ்.தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா கூட்டுப் படைகள் ஒரு புறம் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் சிரியாவின் நட்பு நாடான ரஷியாவும், தீவிர வாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா ராணுவத்துக்கு உதவி புரிந்து வருகிறது.

 

இதனால் தீவிரவாதிகளின் வசம் இருந்த பல்மைரா என்ற நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவு சின்னம் பட்டியலில் உள்ளது. இதற்கிடையே மீட்கப்பட்ட பல்மைராவில் ரஷியா ராணுவ தளம் அமைத்து வரும் தகவல் வெளியாகி உள்ளது. இது செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இப்படத்தை அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

பல்மைராவில் பாரம்பரிய கலை சிற்பங்களுடன் அருங்காட்சியகம் உள்ளது. பல நினைவுச்சின்னங்களும் உள்ளன. அவற்றை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உடைத்து நொறுக்கி அழித்தனர். 10 மாதங்களுக்கு முன்னர் தான் அந்நகரம் மீட்கப்பட்டது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply