அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்து தகவல்களைச் சேகரிக்கும் ஐ.நா

stepanஇலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து 11 மாவட்டங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள் கள தரவு சேர்க்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்துரைத்த அவர்,

 

களத்தின் தேவைகளை பொறுத்து இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் உதவியளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய நாடுகளின் மனிதாபினமான விடயங்களுக்கான கூட்டிணைப்பு அலுவலகம் இலங்கையில் உள்ள ஐ.நாவின் உள்ளுர் அலுவலகங்களின் ஊடாக உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply