வங்காளதேசத்தில் மருத்துவர் கொடூரமாக வெட்டிக்கொலை: ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

isisவங்காளதேசத்தில் சிறுபான்மையினர், வெளிநாட்டினர், கல்வியாளர்கள், வலைத்தள கட்டுரையாளர்கள் போன்றோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனர்.அங்கு தலைநகர் டாக்காவில் இருந்து 245 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குஷ்தியா மாவட்டத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் மிர் சனாவுர் ரகுமான் (வயது 55), தன்னுடன் பல்கலைக்கழக பேராசிரியர் சைபுசமான் என்பவரை அழைத்துக் கொண்டு நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கத்தி ஏந்திய நபர்கள், மிர் சனாவுர் ரகுமானையும், பேராசிரியர் சைபுசமானையும் கத்தியால் சரமாரியாக குத்தி சாய்த்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.இதில் மிர் சனாவுர் ரகுமான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவருடன் வந்த பேராசிரியர் சைபுசமான் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவர் படுகொலைக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மருத்துவர் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதில் ஆர்வத்துடன் செயல்பட்டதால் இந்த கொலையை செய்ததாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர் என்று வங்காளதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply